சுய சரிதை
ஆயுதப்படைகளின் தளபதி மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவருமான கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவை, ஆர்எஸ்பீ**, யூஎஸ்பீ, என்டீயு, பீஎஸ்சீ 2022 டிசம்பர் 18 அன்று முதல் வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 25 வது கடற்படைத் தளபதியாக நியமித்தார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கொழும்பு ரோயல் கல்லூரியின் சிறந்த பழைய மாணவர் ஆவார். இவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 05வது உள்வாங்கல் பிரிவில் கெடட் அதிகாரியாக 1987 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்று கிளையில் சேர்ந்தார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் ஆரம்பப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அந்த ஆட்சேர்ப்பில் மிகவும் திறமையான அதிகாரிக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், 1989 ஆம் ஆண்டு துணை லெப்டினன்டாக அதிகாரத்தை ஏற்று, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கௌரவ கலைப் பட்டம் (பாதுகாப்பு ஆய்வுகள்) பெற்றார்.
மேலதிக உயர்கல்வியைத் தொடர்ந்த அவர், பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் சர்வதேச உறவுகளுக்கான முதுகலைப் டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்தார் மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மேலும், அவர் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார், மேலும் இந்திய கடற்படை சுழியோடி பாடசாலையில் சுழியோடி நடவடிக்கைகள் தொடர்பான தொழில்முறைத் தகுதிகளையும் பாகிஸ்தான் கடற்படையில் போர்க் கோட்பாடுகள் பற்றிய படிப்பையும் பெற்றுள்ளார். வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள கடற்படைப் போர்க் கல்லூரியின் பழைய மாணவராவார், மேலும் அதே கடற்படைப் போர்க் கல்லூரியின் கடற்படைப் பணியாளர் பாடசாலையில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியை முடித்துள்ளார். மேலும், 2018-2019 ஆம் ஆண்டில் சீனாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இருந்து இராணுவ அறிவியல் மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது
அர்ப்பணிப்புடனும் தொழில்சார் திறமையுடனும் பணியை செய்து முடிப்பதில் திறமையான தலைவர் என்ற நற்பெயரைக் கொண்ட அவர், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை கடற்படைக்கு சிறந்த சேவையாற்றியுள்ளார். இலங்கை கடற்படையில் பணியாற்றியதன் மூலம், இலங்கை கடற்படையின் முதன்மையான தாக்குதல் படைப்பிரிவான 4 வது விரைவுத் தாக்குதல் படைப்பிரிவின் படைத் தளபதியாகவும், கடற்படையின் விசேட குழுத் தளபதியாகவும் பணியாற்றியதன் மூலம் பெற்ற அனுபவச் செல்வத்தால் அவரது புகழ்பெற்ற வாழ்க்கை வளம் பெற்றது. இந்த நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோது கடலில் சாகசமாகப் போரிட்டு கடற்படையின் வெற்றிக்குப் பங்களித்த அவர் கடற்படையின் சிறப்பு படகுகள் படைக்கு தலைமை தாங்கிய ஒரு கட்டளை அதிகாரி மற்றும் கடற்படையின் சுழியோடி மற்றும் மீட்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பல முக்கியமான மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார். அவரது கடற்படை சேவையின் போது, அவர் பல துரித தாக்குதல் படகுகள், வேகமான ஆயுதக் கப்பல்கள், தரையிறங்கும் கப்பல், வேகமான பயணிகள் கப்பல் மற்றும் வேகமான ஏவுகணைக் கப்பல்களுக்கு கட்டளையிட்டார். அவர் தனது கடல்சார் சேவையின் போது, ஆழ்கடல் தாக்குதல் கப்பலான சாகார என்ற இலங்கை கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கடைசியாக பணியாற்றியுள்ளார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தனது பதவிக்காலத்தில் கடற்படை நிறுவனங்களில் பல முக்கிய நியமனங்களை பெற்றுள்ளார். இதன்படி, இலங்கை கடற்படையின் முன்னணி பயிற்சி நிறுவனமான இலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தின் தளபதி, கடற்படை பயிற்சி பணிப்பாளர், கடற்படை நடவடிக்கைகள் பணிப்பாளர், கடற்படை வெளிநாட்டு ஒத்துழைப்பு பணிப்பாளர், கடற்படை சிறப்பு படைகள் பணிப்பாளர், கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர், வட மத்திய கடற்படைக் கட்டளையின் பிரதி தளபதி, தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி, கடற்படைத் துணைத் தலைமை தளபதி மற்றும் கடற்படைத் துனைத் தளபதியாக பணியாற்றியுள்ளார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா போரின் பொது மேற்கொண்ட துணிச்சலான செயல்களுக்காக மூன்று தடவைகள் ரண சூர பதக்கமும், அவரது களங்கமற்ற குணத்துக்காக உத்தம சேவா பதக்கமும், திறமை, அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனை பாராட்டி எட்டு (08) சந்தர்ப்பங்களில் கடற்படைத் தளபதியின் பாராட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
நீச்சல், வாட்டர் போலோ, விண்ட்சர்ஃபிங், கயாக்கிங் மற்றும் வேகப் படகு சவாரி போன்ற நீர்வாழ் விளையாட்டுகளில் இருந்து சைக்கிள் ஓட்டுதல், துப்பாக்கிச் சூடு, வாள்வீச்சு மற்றும் வில்வித்தை போன்ற சாகச விளையாட்டுகள் வரை விளையாட்டுக்கான அவரது திறமை மிகவும் வேறுபட்டது. கடல் கயாக் மூலம் இலங்கையைச் சுற்றி வந்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்த இவர், இலங்கையில் கனோயிங் மற்றும் கயாக்கிங் தேசிய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ற வகையில், நாட்டில் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிப்பதில் தனித்துவமான பங்களிப்பைச் செய்துள்ளார். இவர் கேனோ ஸ்பிரிண்ட் மற்றும் டிராகன் படகு விளையாட்டுக்கான சர்வதேச கேனோ ஃபெடரேஷன் சர்வதேச தொழில்நுட்ப அதிகாரி மற்றும் கேனோயிங்கில் ஒரு நிலை பயிற்சியாளராவார்.
வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா திருமதி மாலா லமாஹேவாவை மணந்தார், அவர்களுக்கு சச்சித் (24), ஷமல் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர்.