நீல பசுமை போர்" திட்டம்
இலங்கையின் கடல் மற்றும் கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலைத்தன்மைக்கு முக்கிய அச்சுறுத்தல்களாக நிலம் மற்றும் கரையோர மூலங்களிலிருந்து கடல் சூழலுக்கு வெளியிடப்படும் கழிவுகள் குறிப்பிடலாம். இது சதுப்புநிலங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நேரடி சேதம் ஏற்படுத்தும். அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் கட்டுப்பாடற்றமாக கடல் வளங்கள் பயன்படுத்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படுகின்ற சேதம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளால் கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படுகின்ற நேரடி பாதிப்புகள் கருத்தில் கொள்ளலாம்.
இவ்வாறான கடல் சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான வளங்கள் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு நிறுவனமாக, இலங்கை கடற்படை நிலையான சூழலை நிறுவும் நோக்கில் விசேட செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றது. மேலும், சுற்றாடல் தொடர்பான நாற்பத்தொரு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கை முக்கிய கையொப்பமிட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் நாட்டின் தேசியப் பொறுப்பாகும். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக கடந்த ஐ.நா மாநாட்டிலும் சுற்றாடல் பாதுகாப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், நீல பசுமை சூழலொன்று எதிர்காலத்திற்கு வழங்குவதுக்காக சூழலைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது மற்றும் சிவில் சமூகத்திற்கும் பங்களிக்கும் வகையில் நாடு முழுவதும் கடற்படை பல நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, திருகோணமலை கடற்படைத் தளத்தை நீல பசுமையான சூழல் வலயமாக “நீல பசுமை போர்” என்ற தொனிப்பொருளில் பிரகடனப்படுத்தி இந்த தொலைநோக்குப் பார்வையின் முன்னோடித் திட்டத்தை கடற்படை ஆரம்பித்துள்ளது.