சேவை வனிதா
இலங்கை கடற்படை சேவை வனிதா பிரிவு 1984 டிசம்பர் 07 இல் ஆரம்பிக்கப்பட்டது. கடற்படை சேவை வனிதா பிரிவின் முதலாவது தலைவியாக அப்போதைய கடற்படை தளபதியாக கடமையாற்றிய வைஸ் அட்மிரல் ஏ.எச்.ஏ. டி சில்வாவின் மனைவி ஸ்ரீயா டி சில்வா நியமிக்கப்பட்டதுடன், கடற்படை சேவை மகளிர் பிரிவின் நோக்கங்களை அடைவதன் மூலம் அதன் நலனுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பங்களித்தார்.
கடற்படை சேவை வனிதா பிரிவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது வீரமரணம் அடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகள் மற்றும் நன்கொடைளை வழங்குதல், போரில் ஊனமுற்ற கடற்படை வீரர்களின் நலனைக் கவனிப்பது, சுறுசுறுப்பான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பணியாற்றுதல், அத்துடன் கடற்படை சேவைப் பிரிவு வைத்தியசாலைகள் சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இவ்வாறான உதவிகளை வழங்கும் பணிகளில் இப் பிரிவானது செயல்பட்டு வருகின்றது.